முதுகலைப் படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, December 31, 2020

முதுகலைப் படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

 முதுகலைப் படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில், முதுகலை படிப்பிற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.


காஞ்சிமாமுனிவர் அரசினர் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் சங்கர்ராஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


காஞ்சிமாமுனிவர் அரசினர் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2020~~21ம் கல்வியாண்டில், முதலாண்டு தமிழ், பிரெஞ்சு, வரலாறு, பொருளாதாரம், தாவரவியல், மனையியல், சுற்றுலாவியல் ஆகிய துறைகளில் இதுவரை விண்ணப்பிக்காமல் விட்டவர்கள், வரும் 6ம் தேதியன்று விண்ணப்பிக்கலாம்.


புதுச்சேரி பிராந்தியத்தை சேர்ந்தோர் அலுவலக நேரத்தில் நேரிலும், காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியம் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்தோர்


 kmgipsradmission@gmail.com


 என்ற மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு


 www.kmcpgs.py.gov.in 


என்னும் இணையதளத்தைக் காணலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment