புதிய துவக்கப்பள்ளிகள் துவங்க ஆய்வு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, December 24, 2020

புதிய துவக்கப்பள்ளிகள் துவங்க ஆய்வு

 புதிய துவக்கப்பள்ளிகள் துவங்க ஆய்வு


கோவை : புதிய துவக்கப்பள்ளிகள் துவங்க, தேவை இருப்பின், இடம் ஆய்வு செய்து, ஆவணங்கள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒரு கி.மீ., இடைவெளிக்குள் துவக்கப்பள்ளியும், மூன்று கி.மீ., இடைவெளிக்குள் ஒரு நடுநிலைப்பள்ளியும், இருப்பது அவசியம். 


இந்த எல்லைப்பரப்பிற்குள் பள்ளிக்கூடம் இல்லாதபட்சத்தில், ஆண்டுதோறும் ஆய்வு செய்து, தேவை அடிப்படையில் நிதி ஒதுக்கி, புதிய பள்ளிக்கூடம் கட்டப்படும்.இதன்படி, துவக்கப்பள்ளி அமைப்பதற்கான தேவை இருப்பின், ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 


இதோடு, நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்த தகுதியுள்ள, பள்ளிகளின் பட்டியல் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது


.இப்பட்டியல் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை துவங்க ஏதுவாக, கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என, வட்டார கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment