விடைத்தாளை எங்கு அனுப்புவது? மாணவர்கள் குழப்பம் - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, December 24, 2020

விடைத்தாளை எங்கு அனுப்புவது? மாணவர்கள் குழப்பம்

 விடைத்தாளை எங்கு அனுப்புவது? மாணவர்கள் குழப்பம்


ஆன்லைன் முறையில் அரியர் தேர்வுகளை எழுதிய மாணவர்கள், விடைதாள்களை எங்கு அனுப்புவது என்று, தெரியாமல் குழப்பம் அடைந்தனர்.


கல்லூரிகள் திறக்கப்பட்டு, தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடந்து வருகின்றன. இன்ஜி., மாணவர்களுக்கு, ஆன்லைன் முறையில் செய்முறை தேர்வுகள் வரும், 30ம் தேதி வரை நடத்தப்படுகிறது


.கலை, அறிவியல் மாணவர்களுக்கு, 21ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் நடந்து வருகின்றன.


இதேபோன்று, கடந்த பத்தாண்டுகளாக அரியர்ஸ் வைத்துள்ளவர்களுக்கும், ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தப்படுகிறது.


இதற்கிடையே, ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வை எழுதும் மாணவர்கள், தேர்வு முடிந்ததும் தங்களது விடைத்தாள்களை தபாலில், அன்றைய தினமே கல்லூரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்


.அரியர் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர், தங்களது விடைத்தாள்களை எங்கு அனுப்புவது என்று தெரியாமல் குழப்பம் அடைந்தனர்.


மாணவர்கள் கூறுகையில், 'விடைத்தாள்களை கல்லூரிக்கு அனுப்ப வேண்டுமா அல்லது பல்கலைக்கு அனுப்ப வேண்டுமா என, தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.


 கல்லூரியில் கேட்டால் பல்கலைக்கு அனுப்ப தெரிவிக்கின்றனர். பல்கலையில் கேட்டால், கல்லூரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்துகின்றனர். 


அடுத்த தேர்வுகளுக்காவது உரிய வழிகாட்டுதல் வழங்கப்பட வேண்டும்' என்றனர்.

No comments:

Post a Comment