அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, December 24, 2020

அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

 அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்


சென்னை ~ பெண்கள் முன்னேற்றத்தில், சிறந்த சேவை புரிந்தவர்கள், அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துஉள்ளது.இது குறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:பெண்களின் முன்னேற்றத்துக்கு, சிறந்த சேவை புரிந்தோருக்கு, தமிழக அரசால், அவ்வையார் விருது வழங்கப்பட உள்ளது.


இந்த விருதுக்கு, சமூக நலம் சார்ந்த நடவடிக்கைகள், பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும், விதிமுறைகளுக்கு உட்பட்டு, தங்கள் சாதனைகளை உரிய தகவல்களுடன், அதற்கான சான்றுகளை இணைத்து, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில், வரும், 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment