சமையலர் பணியிடம் நேர்காணலில் 232 பேர் - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, December 24, 2020

சமையலர் பணியிடம் நேர்காணலில் 232 பேர்

 சமையலர் பணியிடம் நேர்காணலில் 232 பேர்

சென்னை ~ கலெக்டர் அலுவலகத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையினரால் நடத்தப்பட்ட நேர்காணலில், 223 பேர் பங்கேற்றனர்.சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகள், உண்டு உறைவிட பள்ளிகளில், 15 சமையலர், இரண்டு துாய்மை பணியாளர்பணியிடங்கள் காலியாக உள்ளன.இந்த பணியிடங்களை நிரப்ப, டிச., 7ம் தேதி வரை, தகுதியான நபர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.


இதற்கு, சென்னையைச் சேர்ந்த, 232 பேர் விண்ணப்பித்திருந்தனர். பணியிடங்களுக்கான நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு பணி, சென்னை கலெக்டர் அலுவலகத்தில், கடந்த இரண்டு நாட்களாக நடந்தன


.விண்ணப்பதாரர்களிடம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், ராஜஸ்ரீ உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகள் நேர்காணல் செய்து,சான்றிதழ்களை சரிபார்த்தனர்.தேர்வு செய்யப்பட்டோருக்கு, விரைவில் தகவல் தெரிவிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment