ஆயுள் சான்று சமர்ப்பிக்க சலுகை - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, December 24, 2020

ஆயுள் சான்று சமர்ப்பிக்க சலுகை

 ஆயுள் சான்று சமர்ப்பிக்க சலுகை


சென்னை ~ மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றோர், தங்களின் ஆயுள் சான்றிதழை, தாங்கள் பணியாற்றிய பணிமனையிலேயே சமர்ப்பிக்க, நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.


இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை:


மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற, 13 ஆயிரத்து, 700க்கும் மேற்பட்டோருக்கு, தமிழக அரசின் போக்குவரத்து கழக ஓய்வூதிய நிதி நம்பகத்தின் வாயிலாக, ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.


 ஓய்வூதியர்கள் ஒவ்வொரு ஆண்டும், தங்களின் ஆயுள் சான்றிதழை, போக்குவரத்து கழக பணிமனைகளில் சமர்ப்பிப்பது வழக்கம்.தற்போதுள்ள நோய் தொற்று சூழல் மற்றும் ஓய்வூதியர்களின் வயது முதிர்வை கருதி, இனி, ஓய்வூதியர்கள் கடைசியாக பணியாற்றிய அலுவலகம் அல்லது பணிமனையிலேயே சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஓய்வூதியர்கள், அடுத்தாண்டுக்கான தங்களின் ஆயுள் சான்றிதழை, ஜன., முதல், மார்ச், 15ம் தேதிக்குள், அலுவலக நாட்களில் சமர்ப்பிக்கலாம்


.அதேபோல், தலைமையகம், பட்டுலாஸ் சாலை தொழிற்கூடம், மண்டல தொழிற்கூடங்களில் ஓய்வு பெற்றோர், அந்தந்த அலுவலகங்களில் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.


கே.கே.நகர் பயணச்சீட்டு அச்சகத்தில் பணியாற்றியோர், கே.கே.நகர் பணிமனையிலும், குரோம்பேட்டை கூடுகட்டும் பிரிவில் பணியாற்றியோர், குரோம்பேட்டை ~ 1 பணிமனையிலும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.மேலும் விபரங்களுக்கு, 044~ ~~ 2345 5801 ~ 268 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment