தேசிய திறனாய்வு தேர்வு பாதுகாப்பு நடவடிக்கை - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, December 24, 2020

தேசிய திறனாய்வு தேர்வு பாதுகாப்பு நடவடிக்கை

 தேசிய திறனாய்வு தேர்வு பாதுகாப்பு நடவடிக்கை


அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு தேசிய திறனாய்வு தேர்வு (என்.டி.எஸ்.இ.,) வரும், 27ம் தேதி நடக்கிறது.

இதற்கான தேர்வு மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் சார்ந்து, அனைத்து தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கும் அரசு தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


அதில், 'மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்து தேர்வு மையங்களில், டிச., 26ம் தேதிக்குள் கிருசிநாசினி தெளிக்க நடவடிக்கை எடுத்தல், தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளுதல், அனைவரும் முககவசம் அணிந்திருப்பதை உறுதி செய்தல், மாணவர்கள் அருகருகே அமர்வதை தவிர்த்தல் வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


தேர்வறைக்குள் தேர்வர்கள் அனுமதிக்கும் நேரம் வரை சமூக இடைவெளியுடன் அமர்ந்து தேர்வுக்கு தயாராவதற்கு ஏதுவாக போதுமான எண்ணிக்கையில் காத்திருப்பு அறைகளை அமைக்க வேண்டும் எனவும், உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment