தொல்லியல் அலுவலர் தேர்வு முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, December 30, 2020

தொல்லியல் அலுவலர் தேர்வு முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை

 தொல்லியல் அலுவலர் தேர்வு முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை


தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு, தொல்லியல் அலுவலர் பதவிக்கான தேர்வில் நேர்ந்துள்ள அநீதியைக் களைய, முதல்வர் பழனிசாமி., உடனே தலையிட வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


அவரது அறிக்கை:


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 18 தொல்லியல் அலுவலர் பதவிக்கான தேர்வை அறிவித்தது. அப்பதவிக்கு, எம்.ஏ., தமிழ், எம்.ஏ., வரலாறு ஆகிய கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டன.


இத்துடன், தமிழக அரசு தொல்லியல் முதுநிலை டிப்ளமா எனும் கல்வித் தகுதி இருந்தும், நடந்து முடிந்துள்ள தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ ~ மாணவியர் நிராகரிக்கப்பட்டுஉள்ளனர். அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ ~ மாணவியர் புறக்கணிக்கப்பட்டுள்ளதும் மிகுந்த வேதனைக்குரியது.


இந்த குளறுபடிகளுக்கு உடனே தீர்வு கண்டு, தமிழக அரசின் தொல்லியல் துறையில் பயின்ற தமிழக மாணவ ~ மாணவியருக்கு வேலை வாய்ப்பு வழங்க, அவர்களைக் கலந்தாய்வுக்கு அழைக்க வேண்டும். முதல்வர் பழனிசாமி., உடனே தலையிட்டு, அநீதியை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.


‌ முகக்கவச ஊழல் ‌


ஸ்டாலினின் மற்றொரு அறிக்கை:ரேஷன் கடைகள் வாயிலாக, மக்களுக்கு கொரோனா பாதுகாப்பு முக கவசம் வழங்குவதாக கூறி, அநியாய டெண்டர் முறைகேடில், அ.தி.மு.க., அரசு ஈடுபட்டது. 


தற்போது, அந்த முக கவசங்களைத் தயாரித்தோருக்கு பணத்தை கொடுக்காமல், வஞ்சிக்கும் கொடுமை அம்பலமாகி உள்ளது.தேங்கிக் கிடப்பவை, 5 கோடி முக கவசங்கள் மட்டுமல்ல; அதை தயாரித்த பெண் தொழிலாளர்களின் வாழ்க்கையும்தான். முதலிடம் என்பது, முறைகேடுகளில் தானா?இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment