ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, December 30, 2020

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்


ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார். 


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் என்று கோரி போராடிய போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் பழனிசாமி அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பிய அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் பழிவாங்கும் நோக்கத்தோடு அவர்கள் மீதான குற்றக்குறிப்பாணைகளையும், வழக்குகளையும் கை விடாமல் இருப்பது சரியானதல்ல

No comments:

Post a Comment