மாநிலம் முழுவதும் நாளை முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க தயாராகி வரும் மாநகராட்சி - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, December 30, 2020

மாநிலம் முழுவதும் நாளை முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க தயாராகி வரும் மாநகராட்சி

 மாநிலம் முழுவதும் நாளை முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க தயாராகி வரும் மாநகராட்சி


மாநிலம் முழுவதும் நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கியுள்ளதை தொடர்ந்து பெங்களூருவில் இயங்கி வரும் மாநகராட்சி பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.


 கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டு தொடங்கி 6 மாதங்கள் முடிந்தும் பள்ளி, கல்லூரிகள் திறக்காமல் இருந்தது.


 இந்நிலையில் ஜனவரி 1ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பியூசி இரண்டாமாண்டு வகுப்புகள் தொடங்க மாநில அரசு அனுமதி வழங்கியது. அதையேற்று நாளை முதல் மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகிறது.


இந்நிலையில் பெங்களூரு மாநகராட்சியின் கீழ் 15 முதல்நிலை கல்லூரிகள் மற்றும் 32 உயர்நிலை பள்ளிகள் இயங்கி வருகிறது. இதில் முதல்நிலை கல்லூரிகளில் அறிவியல், வணிகவியல், கலை பிரிவுகளில் 2 ஆயிரத்து 70 மாணவர்களும், உயர்நிலை பள்ளிகளில் 2 ஆயிரத்து 190 மாணவ, மாணவிகளும் உள்ளனர்.


 கோவிட்-19 விதிமுறைகள் படி அவர்கள் வகுப்பறையில் அமர்ந்து படிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஒரு வகுப்பில் 15 மாணவர்கள் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளது.


 விசாலமான வகுப்பறையில் 20 இருக்கைகள் போடப்பட்டு வருகிறது. கிளைவ்லைட் டவுன் உயர்நிலை பள்ளியில் 187 மாணவர்கள் உள்ளனர்.


8 வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. அதே வளாகத்தில் உள்ள முதல்நிலை கல்லூரியில் 493 மாணவர்கள் உள்ளனர். 10 வகுப்பறைகள் உள்ளது. இது போதுமானதாக இல்லை என்பதால், ஷிப்ட் முறையில் வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


 மற்ற பள்ளி, கல்லூரிகளில் இட நெருக்கடி இல்லை என்று மாநகராட்சி கல்வி அதிகாரி ஜெ.மஞ்சுநாத் தெரிவித்தார். கிளைவ்லைட் டவுன் உயர்நிலை பள்ளியில் போதுமான இடவசதி இல்லை என்பதால், ஷிப்ட் முறையில் வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment