அரசு பள்ளி மாணவிக்கு எம்.பி.பி.எஸ்., 'சீட்': பள்ளி இயக்குநர் பாராட்டு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, December 26, 2020

அரசு பள்ளி மாணவிக்கு எம்.பி.பி.எஸ்., 'சீட்': பள்ளி இயக்குநர் பாராட்டு

 அரசு பள்ளி மாணவிக்கு எம்.பி.பி.எஸ்., 'சீட்':  பள்ளி இயக்குநர் பாராட்டு


அரசு மருத்துவ கல்லுாரியில் இடம் கிடைத்த, கதிர்காமம் பள்ளி மாணவிக்கு, பள்ளி கல்வி இயக்குநர் பாராட்டு தெரிவித்தார்.


புதுச்சேரி அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, நீட் மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டு, சேர்க்கை ஆணை வழங்கப்பட்டுள்ளது.


இதில், கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரியில், கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதிக்கு, இடம் கிடைத்துள்ளது.நீட் தேர்வில்290 மதிப்பெண் பெற்ற ஸ்ரீமதிக்கு, பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பு இடஒதுக்கீட்டில் அரசு மருத்துவ கல்லுாரியில் இடம் கிடைத்துள்ளது.


மாணவி ஸ்ரீமதியை, பள்ளி கல்வி இயக்குநர் ருத்ரகவுடு, பள்ளியின் முதல்வர், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் பாராட்டினார்.

No comments:

Post a Comment