தேர்வுக்கு ஆதார் கட்டாயமில்லை: டி.என்.பி.எஸ்.சி.,புதிய அறிவிப்பு வெளியீடு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, December 26, 2020

தேர்வுக்கு ஆதார் கட்டாயமில்லை: டி.என்.பி.எஸ்.சி.,புதிய அறிவிப்பு வெளியீடு

 தேர்வுக்கு ஆதார் கட்டாயமில்லை: டி.என்.பி.எஸ்.சி.,புதிய அறிவிப்பு வெளியீடு


தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய ஆதார் கட்டாயமில்லை என டி.என்.பி.எஸ்.சி., புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.


இது குறித்து கூறப்படுவதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வானையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்புஒன்றை வெளியிட்டு இருந்தது. 


அதில் டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும், அவர்களின் ஒரு முறைப்பதிவு மற்றும் நிரந்தர பதிவில், தங்கள் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும். இதுவரை, ஆதார் எண்ணை பதிவு செய்யாதவர்கள், விரைவில் பதிவு செய்ய வேண்டும்.


தேர்வர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட, ஒரு முறைப்பதிவு வைத்திருக்க அனுமதியில்லை. ஆனால், பலர் தவறுதலாக, ஆதார் எண்ணை பதிவு செய்துள்ளதாக, தேர்வாணையத்திற்கு தெரிவித்து உள்ளனர். 


அவர்களுக்கு ஒரு முறை மட்டும், தங்களின் ஆதார் பதிவை ரத்து செய்து, தங்கள் விருப்பப்படி, நிரந்தர பதிவில் ஆதார் எண்ணை இணைக்க, https://www.tnpsc.gov.inஎன்ற, இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது


தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். வரும் காலங்களில், தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யும் முன், தங்களின் ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்படுகிறது


. ஜன., 3ல் நடக்க உள்ள, 'குரூப் -1' முதல் நிலை தேர்வு; ஜன., 9, 10ல் நடக்க உள்ள தொழில், வணிக துறையில் உதவி இயக்குனர் பதவிக்கான தேர்வு ஆகியவற்றுக்கு, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்த பின், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில்  (26ம் தேி) வெளியிட்டுள்ள அறிவிப்பில் தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதற்கு ஆதார் கட்டாயமில்லை என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment