அரசு வாகனங்களில் பம்பர் அகற்ற உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, December 26, 2020

அரசு வாகனங்களில் பம்பர் அகற்ற உத்தரவு

 அரசு வாகனங்களில் பம்பர் அகற்ற உத்தரவு

அரசு வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள, 'பம்பர்'களை உடனடியாக நீக்கும்படி, தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து, அரசு தலைமை செயலர் சண்முகம் பிறப்பித்த உத்தரவு:சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படியும், மத்திய மோட்டார் வாகன சட்டப்படியும், வாகனங்களில், பம்பர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத இதர அமைப்புகளை பொருத்துவது குற்றம்.


எனவே, வி.ஐ.பி.,யான முக்கிய பிரமுகர்கள், வி.வி.ஐ.பி.,க்களான மிக முக்கிய பிரமுகர்கள் ஆகியோரின் வாகனங்கள் உட்பட, அரசு வாகனங்களில் உள்ள பம்பர்களை உடனடியாக நீக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் உத்தரவிட்டுள்ளார்.


இந்த கடிதம், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களின் அலுவலகங்கள், அனைத்து துறை செயலர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது

No comments:

Post a Comment