சித்தா மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம் அளித்தவர்கள் விவரம் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, December 26, 2020

சித்தா மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம் அளித்தவர்கள் விவரம்

 சித்தா மருத்துவ படிப்புக்கு  விண்ணப்பம் அளித்தவர்கள் விவரம்


சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி மருத்துவப் படிப்புகளுக்கு, 3,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உள்ளனர்.


இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ், அரசு சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஓமியோபதி என, ஐந்து கல்லுாரிகளில், 330 இடங்கள் உள்ளன.


இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 50 இடங்கள் போக, 280 இடங்கள் மாநில அரசிடம் உள்ளன. இதேபோல், 20 தனியார் கல்லுாரிகளில், 65 சதவீதம் மாநில அரசுக்கும்; 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன.


இந்திய மருத்துவ முறை படிப்புகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி பட்டப் படிப்புகளுக்கு இந்தாண்டு, 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.


அதன்படி, 2020 -- 21ம்கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, https://tnhealth.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பப் பதிவு, 13ம் தேதி துவங்கியது. இதுவரை, 3,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துள்ளனர்.


இவர்களில், 1,500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளனர்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, தகுந்த ஆவணங்களுடன், வரும், 31ம் தேதி மாலை, 5:30 மணிக்குள், 'செயலர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 16' என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment