ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு இலவசமாக பயிற்சி - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, December 26, 2020

ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு இலவசமாக பயிற்சி

 ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு இலவசமாக பயிற்சி


மதுரை காமராஜர் பல்கலையின், அண்ணா நுாற்றாண்டு குடிமை பணி கள் பயிற்சி அகாடமியில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பணிகளுக்கான முதல் நிலை தேர்வுகளுக்கு, ஆண்டு தோறும், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.


நடப்பாண்டு பயிற்சி வகுப்பிற்கு, தகுதியான மாணவர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு, 2021 ஜன., 31ம் தேதி நடக்கிறது.


 பயிற்சியில் சேர விரும்புவோர், அதற்கான விண்ணப்ப படிவத்தை, மதுரை காமராஜர் பல்கலையின், www.mkuniversity.co.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதை பூர்த்தி செய்து, ஜன., 20ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.


தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, பிப்., 15ம் தேதி முதல், ஜூன், 26ம் தேதி வரை பயிற்சி நடத்தப்படும்.


 இலவசமாக வழங்கப்படும் பயிற்சியில் பங்கேற்கும் வெளியூர் நபருக்கு, உணவு ஊக்கத்தொகையாக, 3,000 ரூபாய் வழங்கப்படும்.மேலும் விபரங்களை, 0452-- - 2458231, 98656 55180 என்ற எண்களில் பேசி அறியலாம்.

No comments:

Post a Comment