அரசு பள்ளி மாணவர்களுக்கு I.I.T, J.E.E பயிற்சி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 22, 2020

அரசு பள்ளி மாணவர்களுக்கு I.I.T, J.E.E பயிற்சி

 அரசு பள்ளி மாணவர்களுக்கு I.I.T, J.E.E பயிற்சி


அரசு பள்ளி மாணவர்கள், ஐ.ஐ.டி., ~ ஜே.இ.இ., போட்டி தேர்வுக்கு தயாராக, இணையவழி பயிற்சி விண்ணப்பங்களை, வரும், 31க்குள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தேசிய தேர்வு முகமை சார்பில், ஐ.ஐ.டி., ~ ஜே.இ.இ., போட்டித்தேர்வு நடத்தப்படுகிறது. இதன் வாயிலாக, இந்திய தொழில்நுட்ப கழக கல்வி நிறுவனங்களில், உயர்கல்வியில் சேர முடியும்.


இப்போட்டி தேர்வுகளில், தமிழக அரசு, அதன் உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பயிற்சி பெற, தமிழக அரசு புதுடில்லியை சேர்ந்த, 'நெக்ஸ்ட் ஜென் வித்யா' நிறுவனத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.இவர்கள், மாணவர்களுக்கு தனித்தனியே, 'யூசர் ஐ.டி., பாஸ்வேர்டு' கொடுத்து, இணையவழி பயிற்சி வழங்குவர்.


இப்பயிற்சி, ஜன., 4ல் துவங்க உள்ளது. விரும்பும் மாணவர்கள், தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக, வரும், 31க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மாணவர்கள் பயிற்சி பெறுவதை கண்காணிக்க, அந்தந்த பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கு, தனித்தனியே யூசர் ஐ.டி., கொடுக்கப்பட்டுள்ளது.


இதில், போட்டித்தேர்வுக்கு தேவையான, கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment