மிக்சோபதி மருத்துவ முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிப்ரவரி 1ல் 50 இடங்களில் தொடர் உண்ணாவிரதம்: இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, January 28, 2021

மிக்சோபதி மருத்துவ முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிப்ரவரி 1ல் 50 இடங்களில் தொடர் உண்ணாவிரதம்: இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு

 மிக்சோபதி மருத்துவ முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிப்ரவரி 1ல் 50 இடங்களில் தொடர் உண்ணாவிரதம்: இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு


இந்தியாவில் அலோபதி டாக்டர்கள் அல்லாத ஆயுர்வேதம், சித்தா, ஓமியோபதி டாக்டர்கள் 56 வகையான அறுவை சிகிச்சை செய்யலாம் என மத்திய அரசு அறிவித்தது. 


இந்தநிலையில் ஆயுர்வேதம், சித்தா, ஓமியோபதி மற்றும் அலோபதி மருத்துவ முறைகள் என அனைத்து ஒருங்கிணைந்து ‘மிக்சோபதி’ மருத்துவமுறையில் சிகிச்சையும் அளிக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது. இதனால் பொது மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என இந்த சட்டத்துக்கு மருத்துவ சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன


இந்தநிலையில் நேற்று இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் ஜெ.ஏ.ஜெயலால் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கிளை தலைவர் டாக்டர் ராமகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் டாக்டர் முத்தையாராஜா ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் டாக்டர் ஜெ.ஏ.ஜெயலால் நிருபர்களிடம் கூறியதாவது: 


ஆயுர்வேதம், சித்தா மற்றும் ஓமியோபதி முறையில் மருத்துவம் பயின்றவர்களுக்கு மயக்க மருந்து கையாளுதல், அறுவை சிகிச்சை செய்ய தேவையான படிப்பு மற்றும் பயிற்சி வழங்கப்படுவதில்லை. எனவே அவர்களும் முக்கிய அறுவை சிகிச்சை செய்தால் பொதுமக்கள் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தான் இந்திய மருத்துவ சங்கம் இந்த ‘மிக்சோபதி’ மருத்துவமுறையை எதிர்கிறது


இந்த எதிர்ப்பை மத்திய அரசுக்கு காட்டும் விதமாக வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை இந்தியா முழுவதும் 50 இடங்களில் தொடர் உண்ணாவிரதத்தில் இந்திய மருத்துவ சங்கத்தின் டாக்டர்கள் ஈடுபட உள்ளனர். தமிழகத்தில் சென்னை உட்பட 4 இடங்களில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.  கடைசி நாளான 14ம் தேதி  அனைத்து மாநில தலைநகரிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment