எல்.எல்.எம் பட்டப்படிப்புக்கு இன்று கலந்தாய்வு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, January 28, 2021

எல்.எல்.எம் பட்டப்படிப்புக்கு இன்று கலந்தாய்வு

 எல்.எல்.எம் பட்டப்படிப்புக்கு இன்று கலந்தாய்வு


சட்டக்கல்வி இயக்குநர் சந்தோஷ்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு: 2020-21 ம் கல்வியாண்டு சட்டக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, செங்கல்பட்டு, புதுப்பாக்கம் (செங்கல்பட்டு ), விழுப்புரம், தருமபுரி, வேலூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய சட்டக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் எல்.எல்.எம் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான கலந்தாய்வு அமர்வு 29ம் தேதி (இன்று) மற்றும் 30ம் தேதி (நாளை) ஆகிய இரண்டு நாட்களில் காலை 9 மணி முதல் திருவள்ளூர் மாவட்டம், பட்டறைப்பெரும்புத்தூரில் உள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற உள்ளது


மேலும், பொது தரவரிசை தகுதி மதிப்பெண் பட்டியல், கட் ஆப், தகுதியற்றோர் பட்டியல் www.tndls.ac.in என்ற சட்டக்கல்வி இயக்ககம் மற்றும் அரசு சட்டக் கல்லூரி வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.


 கலந்தாய்வுக்கு கடிதம் பெற்ற விண்ணப்பதாரர்களும் மற்றும் கட் ஆப் மதிப்பெண்ணில் இடம்பெற்று, கடிதம் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்களும் கலந்தாய்வில் உரிய சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம். இவ்வாறு, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment