தனியார் பள்ளி கட்டணம் விரைவில் அறிவிக்கப்படும்: கர்நாடகம் கல்வி அமைச்சர் சுரேஷ்குமார் தகவல் - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, January 28, 2021

தனியார் பள்ளி கட்டணம் விரைவில் அறிவிக்கப்படும்: கர்நாடகம் கல்வி அமைச்சர் சுரேஷ்குமார் தகவல்

 தனியார் பள்ளி கட்டணம் விரைவில் அறிவிக்கப்படும்: கர்நாடகம் கல்வி அமைச்சர் சுரேஷ்குமார் தகவல்


பெங்களூரு: நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தனியார் பள்ளி கட்டணம் விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்தார். பெங்களூருவில் இது தொடர்பாக அமைச்சர் சுரேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ``தனியார் பள்ளி கட்டணம் நிர்ணயம் செய்யும் பணிகள் இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. 


இதனால் விரைவில் அறிவிக்கப்படும். பள்ளி கட்டணத்தை இரண்டு நாட்களில் நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது


இந்த இரண்டையும் நான் சமநிலையாக பார்க்க வேண்டியுள்ளது. திடீர் என்று கல்வி கட்டணம் தொடர்பாக முடிவு எடுக்க முடியாது. கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க கோரி பெற்றோர்கள் போராட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளனர். தீர்வு ஏற்படுத்தும் கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம்.


 தேவைப்பட்டால் இன்னும் அரசுக்கு ஆலோசனைகள் வழங்கட்டும். அதை விட்டு போராட்டம் நடத்துவது வேண்டாம். தனியார் கல்வி நிறுவனங்களின் நெருக்கடிக்கு நான் அடிபணியவில்லை. அப்படி இருந்தால் இந்த விஷயம் குறித்து ஆலோசனைக்கு எடுத்து கொண்டிருக்க மாட்டேன்.


நான் மாணவர்கள், பெற்றோர்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறேன், அவர்களுக்காக வேலை செய்து வருகிறேன். மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எந்த முடிவும் எடுக்க மாட்டேன். விரைவில் கட்டணம் குறித்து அறிக்கை வெளியிடப்படும்.


 வழக்கமான வகுப்புகள் நடத்துவது தொடர்பாக நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடத்தப்படும். நிபுணர்களிடம் கல்வி துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படும். பின்னர் அவர்களின் அறிக்கை வந்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

1 comment: