தமிழகத்தில் நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மல்டி வைட்டமின், ஜிங்க் மாத்திரை: சுகாதாரத்துறையினர் வழங்க நடவடிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, January 16, 2021

தமிழகத்தில் நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மல்டி வைட்டமின், ஜிங்க் மாத்திரை: சுகாதாரத்துறையினர் வழங்க நடவடிக்கை

 தமிழகத்தில் நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மல்டி வைட்டமின், ஜிங்க் மாத்திரை: சுகாதாரத்துறையினர் வழங்க நடவடிக்கை


தமிழகத்தில் நாளை மறுநாள் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 


தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று மொத்தம் 11 ஆயிரத்து 600 பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு பயிலும் 18லட்சம் மாணவர்கள் பள்ளிக்கு வர உள்ளனர்.


 அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் விதமாக மல்டி வைட்டமின், ஜிங்க் மாத்திரைகளை சுகாதாரத்துறையினர் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் நாளை மறுநாள் மாணவர்களுக்கு வழங்க வைட்டமின் மாத்திரைகளை தயார் படுத்தி வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


 இதற்காக தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 92 லட்சத்து 130 வைட்டமின் மாத்திரைகளும், ஒரு கோடியே 92 லட்சத்து 130 ஜிங்க் மாத்திரைகளும் என மொத்தம் 3.84 கோடி மாத்திரைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment