வேலை வாய்ப்பு பதிவை மாற்ற எளிய வழிமுறை - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, January 16, 2021

வேலை வாய்ப்பு பதிவை மாற்ற எளிய வழிமுறை

 வேலை வாய்ப்பு பதிவை மாற்ற எளிய வழிமுறை


தர்மபுரி: வேலை வாய்ப்பு அலுவலகத்தில் செய்துள்ள பதிவை, மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்ற, எளிய வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது என, தர்மபுரி மாவட்ட கலெக்டர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 


தர்மபுரி மாவட்டத்தில் வசிப்போர், இங்குள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வேலை வேண்டி பதிவு செய்துள்ளனர்.


 மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் சென்றுள்ளவர்கள் தங்களது வேலைவாய்ப்பு பதிவை, தற்போது தங்கள் உள்ள மாவட்டத்துக்கு மாற்றம் செய்ய, எளிய முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 


இதற்கு முன், வேலைவாய்ப்பு அலுவலக பதிவை மாற்ற தாசில்தார் அளவில் வழங்கப்படும் குடும்ப குடிப்பெயர்ச்சி, இருப்பிட சான்று, ரேஷன்கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளாக இருந்தால், அதற்கான அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்ற, நடைமுறை இருந்தது. 


தற்போது, மாநில வேலைவாயப்பு சுற்றறிக்கையின் படி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்ற, சுய சான்றளிக்கப்பட்ட ரேஷன் கார்டு, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை அல்லது, டிரைவர் லைசென்ஸ் உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பித்து, மாற்றம் செய்து கொள்ளலாம். இதன் மூலம், வேலை வாய்ப்பு அலுவலக பதிவை எளிதாக மாற்றி மக்கள் பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment