அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் சலுகை:BSNL நிறுவனம் அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, January 25, 2021

அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் சலுகை:BSNL நிறுவனம் அறிவிப்பு

 அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் சலுகை:BSNL நிறுவனம் அறிவிப்பு


லேண்ட்லைன், பிராட்பேண்ட் மற்றும் பைபர்நெட் சேவையில், அனைத்து அரசு ஊழியர்களுக்கும், 10 சதவீத சலுகை வழங்கப்படும்' என, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அறிவித்துள்ளது. 


பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களாக உள்ள அரசு ஊழியர்களை தக்க வைப்பதற்காக, அவர்களுக்கு, 10 சதவீதம் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் செலுத்தும் கட்டணத்தில், ஏற்கனவே, 5 சதவீதம் சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது


.இதன்படி, லேண்ட்லைன், பிராட்பேண்ட் மற்றும் பைபர் இன்டர்நெட் கட்டணங்களில், 10 சதவீதம் சலுகை கிடைக்கும். இந்த சலுகை, அனைத்து அரசு துறைகளில் உள்ள ஊழியர்களுக்கு பொருந்தும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment