பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு தினமும் ரூ 100 ஊக்கத்தொகை  - Minnal Kalvi Seithi

Breaking

Monday, January 4, 2021

பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு தினமும் ரூ 100 ஊக்கத்தொகை 

 பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு தினமும் ரூ 100 ஊக்கத்தொகை 


அசாமில் பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு நாள் தோறும் 100 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாநில கல்வி துறை அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். 


அசாம் மாநில கல்வி துறை அமைச்சர் ஹேமந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது: பெண் குழந்தைகள் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 100 ஊக்கத்தொகை வழங்கப்படும்.


2018-2019ம் கல்வியாண்டில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 12ம் வகுப்பு மாணவிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படும்.


 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு இந்த மாத இறுதியில் தலா 1500 மற்றும் 2000 வங்கியில் செலுத்தப்படும்.


 புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு இந்த தொகை உதவியாக இருக்கும். இந்த இரண்டு திட்டங்களுமே கடந்த ஆண்டு தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. 


ஆனால் கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தாமதமானது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment