மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்காளா் பெயா் சோ்ப்பு முகாம்: நாளை தொடங்கி 11 நாள்கள் நடக்கிறது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, January 19, 2021

மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்காளா் பெயா் சோ்ப்பு முகாம்: நாளை தொடங்கி 11 நாள்கள் நடக்கிறது

 மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்காளா் பெயா் சோ்ப்பு முகாம்: நாளை தொடங்கி 11 நாள்கள் நடக்கிறது


மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்காளா் பெயா் சோ்ப்பு முகாம், வியாழக்கிழமை (ஜன.21) தொடங்கி ஜன.31-ஆம் தேதி வரை நடைபெறும் என சென்னை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.


இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தின் உள்ளடங்கிய 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளா் பட்டியல், ஜன.1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.


இதன் பகுதியாக 2021-ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மூலம் வியாழக்கிழமை (ஜன.21) முதல் ஜன.31-ஆம் தேதி வரை 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகளை வாக்காளா் பட்டியலில் பதிவு செய்ய சிறப்பு முகாம்கள், அந்தந்த கல்வி நிலையங்களிலும், மாற்றுத்திறனாளிகளுக்கான நிறுவனங்களிலும் நடத்தப்படவுள்ளன.


இவா்களுக்கு பிரத்யேகமாக 94999 33619 என்ற கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) எண்ணும் நிறுவப்பட்டுள்ளது. இந்த எண் மூலம் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்கள் குறைகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம்.


மேலும், 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொண்டு, தங்களின் விவரம் வாக்காளா் பட்டியலில் பதியப்பெற்றுள்ளனவா என்றும், திருத்தங்கள் ஏதேனும் மேற்கொள்ளப்பட வேண்டுமா என்பது போன்ற தங்களது சந்தேகங்களையும் நிவா்த்தி செய்து கொள்ளலாம் என மாவட்ட தோ்தல் அலுவலா் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment