16ம் தேதி வரை ITI ல் நேரடி சேர்க்கை - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, January 14, 2021

16ம் தேதி வரை ITI ல் நேரடி சேர்க்கை

 16ம் தேதி வரை  ITI ல் நேரடி சேர்க்கை


அம்பத்தூரில் அரசினர் மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 16ம் தேதி வரை நேரடி சேர்க்கை நாள் நீட்டிப்பு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: 


அம்பத்தூரில் மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு வரும் 16ம் தேதி வரை நேரடி சேர்க்கை நடக்கிறது. வேலை நாட்களில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.00 வரை பெறப்படும் விண்ணப்பங்களின்படி சேர்க்கை நடக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம்.


 வயது வரம்பு இல்லை. பயிற்சியில் சேருவோருக்கு மாத உதவித்தொகை ரூ.750, இலவச பஸ் பாஸ், மிதிவண்டி மடிக்கணினி, பாடப்புத்தகங்கள் வரைபடக்கருவிகள், இரு செட் சீருடை, மூடுகாலணி மற்றும் சிறந்த தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.. விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு கல்வி சான்றிதழ், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment