ஜனவரி 18 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும்: முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, January 5, 2021

ஜனவரி 18 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும்: முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு

 ஜனவரி 18 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும்: முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு



ராஜஸ்தானில் ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஜனவரி 18 முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


கரோனா நோய்த் தொற்று பரவலைத் தொடா்ந்து பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் கடந்த மாா்ச் மாதம் முதல் மூடப்பட்டன. பின்னா், பொது முடக்கத் தளா்வுகளை மத்திய அரசு படிப்படியாக அமல்படுத்தி வந்தது. அதன் ஒரு பகுதியாக, செப்டம்பா் 21-ஆம் தேதியிலிருந்து 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.


இந்த அறிவிப்பைப் பின்பற்றி சில வட மாநிலங்களில் ஏற்கெனவே பள்ளிகள் திறக்கப்பட்டன.


இந்நிலையில், கேரளத்தில் 9 மாத இடைவெளிக்குப் பிறகு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மட்டும் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன.


இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஜனவரி 18 முதல் மீண்டும் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 


மாநில முதல்வா் அசோக் கெலாட்  தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கரோனா நிலைமை குறித்து மறுஆய்வுக் கூட்டத்தில் கரோனா வழிகாட்டுதல்களுடன் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், ஜனவரி 18 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் முதல்வர் அறிவித்தார்


இதுதொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், கரோனா வழிகாட்டுதல்களுடன் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் மற்றும் அரசு பயிற்சி நிறுவனங்கள் வகுப்புகள் ஜனவரி 18 முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 


கரோனா தடுப்பூசி செலுத்துதல் பணி தொடங்கப்பட உள்ளதால், மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றை ஜனவரி 11 முதல் திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அனைத்து கல்வி நிறுவனங்களும் ஒவ்வொரு வகுப்பிலும் மொத்த எண்ணிக்கையில் 50 சதவீத மாணவா்கள் முதல் நாளிலும், மீதமுள்ள 50 சதவீதம் பேர் இரண்டாவது நாளிலும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


ராஜஸ்தானில் கரோனா நோய்த்தொற்றின் பரவலின் நிலை "சிறந்த மேலாண்மை மற்றும் மக்களின் ஒத்துழைப்புடன் நன்கு கட்டுப்படுத்தப்பட்டு" வருவதாக கூறியுள்ள கெலாட், மீட்பு விகிதம் எப்போதும் இல்லாத அளவுக்கு 96.31 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளார். 

No comments:

Post a Comment