தமிழகத்தில் புதிய தொழிற்பள்ளிகள்: அடுத்த கல்வியாண்டில் தொடங்க அழைப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, January 5, 2021

தமிழகத்தில் புதிய தொழிற்பள்ளிகள்: அடுத்த கல்வியாண்டில் தொடங்க அழைப்பு

 தமிழகத்தில் புதிய தொழிற்பள்ளிகள்: அடுத்த கல்வியாண்டில் தொடங்க அழைப்பு


தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டில் புதிய தொழிற் பள்ளிகள் தொடங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ், தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்பள்ளிகள் (ஐடிஐ) செயல்பட்டு வருகின்றன.


இந்நிலையில் தமிழகத்தில் புதிதாகத் தொழிற்பள்ளிகள் தொடங்குதல், ஏற்கெனவே செயல்பட்டு வரும் தொழிற்பள்ளிகளுக்குத் தொடர் அங்கீகாரம் பெறுதல், புதிய தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றிற்கு 


www.skilltraining.tn.gov.in 


என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இது குறித்துக் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'வரும் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற, தொழிற்பள்ளிகள் இணையதளத்தில் ஒரு விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.


 புதிய தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் தொடங்குவதற்கான விவரங்களையும் ஒரு விண்ணப்பத்தில் பூர்த்தி செய்தால் போதுமானது.


கட்டண விவரம்


 www.skilltraining.tn.gov.in 


என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


கட்டணம் செலுத்தும்போது, தொழிற்பள்ளியின் வங்கிக் கணக்கில் இருந்து பரிமாற்றம் செய்ய வேண்டும். வங்கி ஸ்டேட்மென்டில் அறிந்துகொள்ள ஏதுவாகத் தாளாளர் பெயரில் செலுத்த வேண்டும்.


 ஒவ்வொரு தொழிற்பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி வரும் ஏப்ரல் 30 ஆகும். அதற்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.


மேலும் விவரங்களுக்கு சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய இடங்களில் உள்ள மண்டல இணை இயக்குநர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்'.


கூடுதல் விவரங்களுக்கு: 044-22501006,


 detischennai@gmail.com


இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment