197 தட்டச்சர்கள் இன்று பணி நியமனம் - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, January 21, 2021

197 தட்டச்சர்கள் இன்று பணி நியமனம்

 197 தட்டச்சர்கள் இன்று  பணி நியமனம்


பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள தட்டச்சர் பதவிக்கு, இன்று பணி நியமன கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. 


பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் என, பல்வேறு அலுவலகங்களில் காலியாக உள்ள, 197 தட்டச்சர் பணியிடங்களை நிரப்ப, 'குரூப் ~ 4' தேர்வு வழியே ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.


அவர்களுக்கு இன்று பணி நியமன கவுன்சிலிங் வழங்கி, உடனடியாக பணியில் சேர்க்க, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.


அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்ச்சி பெற்ற தேர்வர்கள், தங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, காலை, 9:00 மணிக்கு, உரிய ஆவணங்களுடன் சென்று, பணியிடங்களை தேர்வு செய்ய வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment