இன்ஜினியரிங் மாணவர்களுக்கு பிப்ரவரி 18ல் வகுப்புகள் துவக்கம் - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, January 21, 2021

இன்ஜினியரிங் மாணவர்களுக்கு பிப்ரவரி 18ல் வகுப்புகள் துவக்கம்

 இன்ஜினியரிங் மாணவர்களுக்கு பிப்ரவரி 18ல் வகுப்புகள் துவக்கம்


இன்ஜினியரிங் கல்லூரிகளில், இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு, வரும் 18ம் தேதி வகுப்புகள் துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 


அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில், நடப்பு கல்வி ஆண்டுக்கான முதல் செமஸ்டர் தேர்வுகள், ஆன்லைனில் முடிந்த பின், நவம்பர் முதல் வகுப்புகள் நடத்தப்படவில்லை. 


இரண்டு மாதங்களாக, மாணவர்கள் எந்த வித ஆன்லைன் வகுப்பும் இல்லாமல் தவித்து வருகின்றனர். 


இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான இரண்டாம் செமஸ்டர் வகுப்புகள், பிப்., 18ல் துவங்கி, மே 21 வரை நடக்கும். செமஸ்டர் தேர்வு ஜூனில் நடக்கும் என, அண்ணா பல்கலை அறிவித்து உள்ளது.


இந்த அட்டவணைப்படி, இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த, பேராசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment