மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை: பெற்றோர் எதிர்பார்ப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, January 21, 2021

மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை: பெற்றோர் எதிர்பார்ப்பு

 மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை: பெற்றோர் எதிர்பார்ப்பு


பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு, உளவியல் ஆலோசனை வழங்க ஆலோசகர்களை கல்வித்துறை ஏற்பாடு செய்ய வேண்டும்.பல மாதங்களாக 'ஆன்லைன்' வகுப்புகளிலும், கல்வி தொலைக்காட்சிகளிலும் மட்டுமே பாடங்களை கவனித்த மாணவர்கள், தற்போது பள்ளிக்குச்சென்று வருகின்றனர்


. பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடத்துவது குறித்து, தெளிவான அறிவிப்புகள் இன்னும் வெளிவரவில்லை.தேர்வுக்கான பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.


 இருப்பினும், வகுப்புகளுக்கு சென்றாலே பொதுத்தேர்வுக்கு அச்சப்படும் மாணவர்கள், இம்முறை, சுய கற்றல் முறையில் தயாராகியுள்ளது, அவர்களை மேலும் அச்சுறுத்தி வருகிறது.இதனால், அனைத்து பள்ளிகளிலும், இரண்டு நாட்கள் உளவியல் ஆலோசனை வகுப்புகள் மட்டுமே நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


 மாணவர்களுக்கு, உடல்நலம் பாதுகாப்பாக இருக்க, தொடர்ந்து சுகாதாரத்துறையின் சார்பில், முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், காய்ச்சல், உட்பட உடல்நல குறைபாடுகள் காணப்படும் மாணவர்களை, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லவும், பள்ளிகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 மாணவர்களை உடல்நிலை உறுதி கண்காணிக்கப்பட்டாலும், மனதளவில் அவர்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள, உளவியல் ஆலோசகர்களின் உதவி அவசியமாகியுள்ளது.


பள்ளிக்கு அச்சமில்லாமல் வந்து செல்லவும், தேர்வுக்கு தன்னம்பிக்கையோடு தயாராவதற்கும், தேர்வு முடிவுகளின் போது அதை ஏற்றுக்கொள்வதற்கும், மனதளவில் அவர்களை தயார்படுத்த வேண்டியுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், உளவியல் ஆலோசனை திட்டம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது.


 மாவட்ட அளவில் நியமிக்கப்பட்டுள்ள உளவியல் நிபுணர்கள் வாயிலாக, ஆலோசனை வழங்கும் முகாமை, மீண்டும் செயல்படுத்த கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment