தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 29 ல் நேர்முக தேர்வு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, January 13, 2021

தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 29 ல் நேர்முக தேர்வு

 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 29 ல் நேர்முக தேர்வு


கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள, பணியிடங்களுக்கு நடந்த எழுத்து தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும், 29 ல் நேர்முக தேர்வு நடைபெற உள்ளது என, கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் காந்திநாதன் தெரி வித்துள்ளார்.


 இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள உதவியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர் பதவிகளுக்கு கடந்த மாதம் நடந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்முக தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளவர்கள் விபரம் 


www.drbkrur.net 


என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 


எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நேர்முகத்தேர்வு வரும், 29 ல் நடைபெறுகிறது. அதற்கான நுழைவுசீட்டை, இணையதளத்தில் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment