ஜனவரி 30 ம் தேதிக்குள் அம்மா ஸ்கூட்டர் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, January 13, 2021

ஜனவரி 30 ம் தேதிக்குள் அம்மா ஸ்கூட்டர் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு

 ஜனவரி 30 ம் தேதிக்குள் அம்மா ஸ்கூட்டர் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு


வரும், 30க்குள் அம்மா ஸ்கூட்டர் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் மலர்வழி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்திற்கு, அம்மா ஸ்கூட்டர் திட்டத்தில், 2,035 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


 மாவட்டத்தில் வசிக்கும், 18 முதல், 45 வயது வரை பணிக்கு செல்வோர், சுய தொழில் புரிபவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளவர்கள், ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய் வரை இருக்க வேண்டும்.


 அதிகபட்சமாக மானியம், 25 ஆயிரம் ரூபாய் அல்லது வாகன விலையில், 50 சதவீதம் (வாகன அடிப்படை விலை, வரி, காப்பீடு) ஆகிய இவ்விரண்டில் எது குறைவானதோ, அத்தொகை மானியமாக வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்குரிய மூன்று சக்கர வாகனத்திற்கு மானியத்தொகை, 31 ஆயிரத்து, 250 ரூபாய் வழங்கப்படும். 


வரும், 30 மாலை, 5:00 மணிக்குள் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்கள் இணைத்து விண்ணப்பிக்கலாம். மேலும், 


www.tamilnadumahalir.org


tnatws.html 


இணையதளத்தை பார்க்கவும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment