மாநிலம் முழுவதிலும் 50 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி: மீண்டும் மூடப்பட்ட பள்ளிகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, January 6, 2021

மாநிலம் முழுவதிலும் 50 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி: மீண்டும் மூடப்பட்ட பள்ளிகள்

 மாநிலம் முழுவதிலும் 50 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி: மீண்டும் மூடப்பட்ட பள்ளிகள்


பெங்களூரு: மாநிலத்தில் பல மாவட்டங்களை சேர்ந்த 50 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள் மீண்டும் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மாநிலத்தில் கடந்த 1-ம் தேதி மீண்டும் பள்ளி, கல்லூரிகள் தொடங்கப்பட்டது. இதனால் தொற்று பரவல் அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. பல மாவட்டங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்தந்த பள்ளிகளும் மீண்டும் மூடப்பட்டுள்ளது.


பெலகாவி மாவட்டத்தில் அதிகப்படியாக 22 ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து இவர்களிடம் பாடம் படித்த மாணவர்கள் மற்றும் உடன் பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெலகாவி மாவட்டத்தில் உள்ள கடூலி கிராமத்தில் உள்ள பள்ளி மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து சித்ரதுர்கா மாவட்டத்தில் 4 ஆசிரியைகள் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் 7 பள்ளிகள் நேற்று முதல் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்கள் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தொடர்ந்து பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது என மாவட்ட கல்வித்துறை அதிகாரி ரவிசங்கர் ரெட்டி தெரிவித்தார். இதேபோல் விஜயபுரா மாவட்டம் இண்டி தாலுகாவின் பெலிகான் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பள்ளி மூடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாணவர்களும் குறிப்பிட்ட சில நாட்களுக்கு வீட்டு தனிமையில் இருக்க பரிந்தரைக்கப்பட்டுள்ளனர் என விஜயபுரா மாவட்ட கலெக்டர் பி சுனில் குமார் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ``ஆசிரியருக்கு அறிகுறி இன்றி தொற்று பாதித்துள்ளது. இதனால் பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டுள்ளது.


தொடர்ந்து அவர் வித்யகாமா திட்டத்தின் கீழ் படித்த 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளனர். எனவே இவருடன் பணியாற்றி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்றார். சிக்கமகளூரு மாவட்டத்தில் வெவ்வேறு பள்ளிகளில் 4 மாணவர்கள் மற்றும் 5 ஆசிரியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட கலெக்டர் பகாதி கவுதம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், `மூடிகெரே, கடூர் மற்றும் சிக்கமகளூரு ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டுவருகிறது தெரிவித்தார்’’. இதேபோன்று குடகு மற்றும் ஷிவமொக்கா மாவட்டத்திலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  


இதுகுறித்து சுகாதாரத்துரை அமைச்சர் சுதாகர் கூறுகையில், கொரோனா தொற்று பரவலால் பொதுமக்கள் யாரும் பீதி அடையத்தேவையில்லை. நாங்கள் மாணவர்கள் குணமடைய சிறப்பான சிகிச்சைகள் வழங்குவோம். இதற்கு பொதுமக்கள் ஒதுழைப்பு தரவேண்டும் என்றார். கொரோனா தொற்று பரவலால் பொதுமக்கள் யாரும் பீதி அடையத்தேவையில்லை. அரசுதரப்பில், மாணவர்கள் குணமடைய சிறப்பான சிகிச்சைகள் வழங்குவோம். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment