2021-22 கல்வியாண்டில் ஆர்டிஇ சட்டத்தில் மாணவர் சேர்க்கை தொடங்கப்படுமா? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, January 6, 2021

2021-22 கல்வியாண்டில் ஆர்டிஇ சட்டத்தில் மாணவர் சேர்க்கை தொடங்கப்படுமா?

 2021-22 கல்வியாண்டில் ஆர்டிஇ சட்டத்தில் மாணவர் சேர்க்கை தொடங்கப்படுமா?


மாநிலத்தில் 2021-22ம் கல்வியாண்டில் கல்வி உரிமை சட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான ஆன்லைன் பதிவு பணி தொடங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 


மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளும் தரமான கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2007-08ம் கல்வி உரிமை சட்டம் (ஆர்டிஇ) கொண்டுவந்தது.


 இச்சட்டத்தின் படி நாட்டில் இயங்கி வரும் அரசு மானியம் பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு ஓதுக்கீடு செய்ய வேண்டும். ஆரம்பத்தில் சில ஆண்டுகள் இத்திட்டம் செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல் இருந்தது. கடந்த 2017-18-ம் கல்வியாண்டு முதல் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.


கல்வி உரிமை சட்டத்தின் படி மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் ஆன்லைனில் பதிவு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 6ம் தேதி தொடங்கி பிப்ரவரி வரை நடைபெறும். 


இதில் விண்ணப்பிக்கும் மனுக்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தகுதியான மாணவர்களை தேர்வு செய்து பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யும். நடப்பு கல்வியாண்டின் ஆர்டிஇ மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் இன்னும் பள்ளிக்கு செல்லவில்லை.


 இந்நிலையில் வரும் 2021-22ம் கல்வியாண்டிற்கான ஆர்டிஇ விண்ணப்பம் செலுத்துவது தொடர்பாக இன்னும் அறிவிப்பு வெளியிடாமல் உள்ளதால், இவ்வாண்டு மாணவர் சேர்க்கை இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கல்வி உரிமை சட்டத்தின் படி மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் ஆன்லைனில் பதிவு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 6ம் தேதி தொடங்கி பிப்ரவரி வரை நடைபெறும்

No comments:

Post a Comment