இலவச 'லேப்டாப்' 5.32 லட்சம் கொள்முதல் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, January 6, 2021

இலவச 'லேப்டாப்' 5.32 லட்சம் கொள்முதல்

 இலவச 'லேப்டாப்' 5.32 லட்சம் கொள்முதல்


பள்ளி மாணவ ~ மாணவியருக்கு, இலவச, 'லேப்டாப்' வழங்குவதற்காக, 5.32 லட்சம் லேப்டாப் கொள்முதல் செய்ய, 'எல்காட்' நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


தமிழகத்தில், ஒவ்வொரு கல்வியாண்டிலும், பிளஸ் 1 மாணவ ~ மாணவியருக்கு, தமிழக அரசு சார்பில், இலவசமாக லேப்டாப் வழங்கப்படுகிறது.


அந்த வகையில், நடப்பு கல்வியாண்டில், 5.19 லட்சம் பிளஸ் 1 மாணவர்கள்; 11 ஆயிரத்து, 553 முதலாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர்கள்; 463 மாற்றுத்திறனாளி பிளஸ் 1 மாணவர்கள்; கடந்த கல்வியாண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 படித்த, 1,293 மாற்றுத்திறனாளி மாணவர்கள் என, மொத்தம், 5.32 லட்சம் பேருக்கு, லேப்டாப் வழங்கப்பட உள்ளது.


அதற்கு தேவையான லேப்டாப்புகளை கொள்முதல் செய்வதற்காக, எல்காட் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. 


விரைவில் லேப்டாப் கொள்முதல் செய்யப்பட்டு, மாணவ ~ மாணவியருக்கு இலவசமாக வழங்கப்படும் என, எல்காட் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment