ரூ.365க்கு 365 நாட்கள் பி.எஸ்.என்.எல்., நீட்டிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, January 6, 2021

ரூ.365க்கு 365 நாட்கள் பி.எஸ்.என்.எல்., நீட்டிப்பு

 ரூ.365க்கு 365 நாட்கள் பி.எஸ்.என்.எல்., நீட்டிப்பு


பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள், தடையில்லா, 'இன்கமிங்' அழைப்பு பெற, 365 நாட்களுக்கு, 365 ரூபாய்க்கு, 'ரீசார்ஜ்' செய்யும் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.மொபைல் போன் சேவையில், அளவில்லா, 'இன்கமிங்' என்ற நிலை மாறி, அதற்கும், 'ரீசார்ஜ்' செய்வது கட்டாயம் என்றாகி விட்டது. 


இதன்படி, 'பிரீபெய்டு' வாடிக்கையாளர்கள், குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை, ரீசார்ஜ் செய்தால் மட்டுமே, இன்கமிங் அழைப்புகள் வரும். இல்லையெனில், இன்கமிங் அழைப்புகள் துண்டிக்கப்படும்.


இதற்காக, 365 நாட்களுக்கு, 365 ரூபாய் என்ற திட்டத்தை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த திட்ட அவகாசம், தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள், தடையில்லா இன்கமிங் அழைப்புகளை பெறுவதற்காக, 365 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 365 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.


இதில் முதல், 60 நாட்களுக்கு அளவில்லாத அழைப்புகளும், தினமும், '2 ஜி.பி., டேட்டா'வும் வழங்கப்படுகிறது.


 மீதம் உள்ள, 305 நாட்களுக்கு, இன்கமிங் அழைப்புகள் தடையில்லாமல் வரும். 'அவுட்கோயிங்' அழைப்புகளுக்கு, தேவைக்கேற்ப ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். இந்த திட்டத்தின் அவகாசம், தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி, பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் பலன் பெறலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment