2,400 பேருக்கு வேலை என்னாச்சு? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, January 6, 2021

2,400 பேருக்கு வேலை என்னாச்சு?

 2,400 பேருக்கு வேலை என்னாச்சு?


மின் வாரியத்தில், 2,400 பேரை நியமனம் செய்வதற்காக அறிவிப்பு வெளியாகி ஓராண்டாகியும், இதுவரை தேர்வு நடத்தப்படாதது, விண்ணப்பதாரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக மின் வாரியத்தில், 52 ஆயிரம் காலியிடங்கள் இருப்பதால், தற்போது பணியில் இருப்பவர்களுக்கு, அதிக பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 1,300 கணக்கீட்டாளர், 500 இளநிலை உதவியாளர், 600 உதவி பொறியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு, 2020 ஜன., 8ல் வெளியானது.


 பட்டதாரிகளிடம் இருந்து, பிப்., ~ மார்ச் மாதங்களில், இணையத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இதற்கு, 2 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். 



மே மாதம் எழுத்து தேர்வு நடத்தி, அதிக மதிப்பெண் எடுப்பவருக்கு, அரசின் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், பணி ஆணை வழங்க திட்டமிடப் பட்டது


. மார்ச் இறுதியில் ஊரடங்கு அமலானதால், திட்டமிட்டபடி தேர்வு நடத்தவில்லை. ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தி வந்த நிலையிலும், இதுவரை, தேர்வு நடத்தப்படாத நிலையில், நாளையுடன், தேர்வு அறிவிப்பாணை வெளியாகி, ஓராண்டு முடிகிறது.


இது குறித்து, விண்ணப்பதாரர்கள் கூறியதாவது:சட்டசபை தேர்தல், ஏப்ரலில் நடக்க வாய்ப்புள்ளது.


 தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், நடத்தை விதி அமலுக்கு வரும். அதற்குள், மின் வாரியம் தேர்வு நடத்தி, முடிவை அறிவிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், இம்மாதம் அல்லது பிப்., இறுதிக்குள், விரைவாக தேர்வு நடத்தி, வேலைக்கு ஆட்களை நியமிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment