எம்.எட்., படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பம் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, January 6, 2021

எம்.எட்., படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பம்

 எம்.எட்., படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பம்


அரசு கல்வியியல் கல்லுாரிகளில், எம்.எட்., முதுநிலை பட்டப் படிப்பில் சேர விரும்புவோர், இன்று முதல், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்' என உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:அரசு கல்வியியல் கல்லுாரிகளில், நடப்பு கல்வியாண்டிற்கு, எம்.எட்., பட்டப் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


 www.tngasaedu.in 


என்ற இணைய தளத்தில், இன்று முதல், வரும், 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.ஒரு கல்லுாரிக்கு விண்ணப்பம் பதிவு செய்ய கட்டணம், 2 ரூபாய்; விண்ணப்பக் கட்டணம், 58 ரூபாய் என, 60 ரூபாய் செலுத்த வேண்டும்.


எஸ்.சி., ~ எஸ்.டி., விண்ணப்பதாரர்களுக்கு பதிவுக் கட்டணம், 2 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது, தங்கள் விருப்ப வரிசைப்படி, கல்லுாரிகளை தேர்வு செய்ய வேண்டும். தங்கள் சான்றிதழ்களையும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


இது தொடர்பான கூடுதல் விபரங்கள், இணையதளத்தில் உள்ளன. பதிவு செய்வதில் சிரமம் இருந்தால், 044 ~~ 2235 1014, 2235 1015, 2827 6791 என்ற எண்களில், காலை, 10:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அமைச்சர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment