தட்டச்சு தேர்வு எப்போது நடக்கும்? - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, January 6, 2021

தட்டச்சு தேர்வு எப்போது நடக்கும்?

 தட்டச்சு தேர்வு  எப்போது நடக்கும்?


தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வு அறிவிப்பை, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், காலம் தாழ்த்தாமல் வெளியிட வேண்டும்' என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், வேலை வாய்ப்புக்காக, பள்ளி மற்றும் கல்லூரி படிப்புக்கு இடையே, தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சியை, வணிகவியல் பயிலகங்களில் படித்து வருகின்றனர்.


கொரோனா காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம், வணிகவியல் கல்வி தேர்வு நடக்கவில்லை. தட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட வணிகவியல் தேர்வை, பிப்ரவரி மாதம், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்த, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.


இதற்கான அரசாணை, கடந்த அக்., 27ல் வெளியானது. ஆனால், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், தேர்வு தேதி அறிவிப்பை வெளியிடாமல், காலம் தாழ்த்தி வருகிறது.


விரைவாக தேர்வு நடத்தி, முடிவுகளை வெளியிட்டால், தேர்ச்சி பெறும் மாணவ ~ மாணவியர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்க முடியும். 


எனவே, 'மாணவ ~ மாணவியர் மற்றும் பெற்றோர் நலன் கருதி, காலம் தாழ்த்தாமல், வணிகவியல் தேர்வுக்கான அறிவிப்பை, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் உடனடியாக வெளியிட வேண்டும்' என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment