5ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா:அரசு பள்ளி மூடல் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, January 22, 2021

5ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா:அரசு பள்ளி மூடல்

 5ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா:அரசு பள்ளி மூடல்


ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் காரைக்காலில் அரசு பள்ளி மூடப்பட்டது. கொரோனா  ஊரடங்கு காரணமாக புதுச்சேரியில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. 


இந்நிலையில்  தொற்று குறைந்ததால் புதுச்சேரி அரசின் உத்தரவுபடி கடந்தாண்டு அக்டோபர் 8ம்  தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. முதலில் 9, 10,11 மற்றும் 12ம்வகுப்புகளுக்கு  சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் துவக்கி நடத்தப்பட்டன. அதன்பின்னர்  அனைத்து வகுப்புகளும் துவங்கப்பட்டன.


 கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து  நீடித்து வரும் நிலையில், மாணவர்களின் உயிரை பணயம் வைக்க கூடாது, பள்ளிகளை  திறக்க கூடாது என்று காரைக்காலில் உள்ள பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள்,  அரசியல் கட்சி பிரமுகர்கள் தொடர்ந்து புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை  விடுத்து வந்தனர்.

No comments:

Post a Comment