6 அரசு பள்ளி தரம் உயர்வு :பெற்றோர் வரவேற்பு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, January 21, 2021

6 அரசு பள்ளி தரம் உயர்வு :பெற்றோர் வரவேற்பு

 6 அரசு பள்ளி தரம் உயர்வு :பெற்றோர் வரவேற்பு


திருப்பூர் மாவட்டத்தில், பெருமாநல்லுார் அரசு உயர்நிலைப்பள்ளி, ஊத்துக்குளி ~ சூரியப்பம்பாளையம் உயர்நிலைப்பள்ளி ஆகியன மேல்நிலைப்பள்ளிகளாகவும், குடிமங்கலம் ~ பெரியபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஏ.அம்மாபட்டி நடுநிலைப்பள்ளி, மங்கலம் நடுநிலைப்பள்ளி, பெரிச்சிபாளையம் நடுநிலைப்பள்ளி ஆகியன உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.


மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும், தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் பாடங்கள் முறையே, ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஒரு கணினி பயிற்றுனர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


தரம் உயர்த்தப்படும் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி ஆசிரியர்களில், உயர்நிலை பள்ளியில் சேர விருப்பமுள்ள ஆசிரியர்களை சேர்த்துக்கொள்ளவும், இதர பணியிடங்களை, பணி நிரவல் வழியே நிரப்பவும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment