திருச்செந்தூர் பள்ளியில் கொடியேற்றிய இளம் விஞ்ஞானி விருதுக்கு தேர்வான 6 ம் வகுப்பு மாணவர் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, January 26, 2021

திருச்செந்தூர் பள்ளியில் கொடியேற்றிய இளம் விஞ்ஞானி விருதுக்கு தேர்வான 6 ம் வகுப்பு மாணவர்

 திருச்செந்தூர் பள்ளியில் கொடியேற்றிய இளம் விஞ்ஞானி விருதுக்கு தேர்வான 6 ம் வகுப்பு மாணவர்


தூத்துக்குடி மாநகராட்சி உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா நேற்று நடைபெற்றது. திருச்செந்தூர் பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவர் தேசிய கொடியேற்றினார்


தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் வீ.ப.ஜெயசீலன் தேசியக்கொடியை ஏற்றினார். சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி ஊழியர்கள், கரோனா தடுப்பு பணி, டெங்கு தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். செயற்பொறியாளர் சேர்மக்கனி, நகர்நல அலுவலர் வித்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மாணவர் கொடியேற்றினார்


திருச்செந்தூர் சரவணய்யர் நடுநிலைப்பள்ளியில் தாளாளர் ச.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை ச.உஷா முன்னிலை வகித்தார். மாவட்ட அளவில் இளம் விஞ்ஞானி விருதுக்கு தேர்வாகியுள்ள 6-ம் வகுப்பு மாணவர் ச.சிவகுகன் தேசியக் கொடியேற்றினார். ஆசிரியர் த.ஜார்ஜ்ராஜ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment