72 நிமிடங்களில், 72 ஆசனங்கள்: குடியரசு தின சாதனை நிகழ்ச்சி - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, January 26, 2021

72 நிமிடங்களில், 72 ஆசனங்கள்: குடியரசு தின சாதனை நிகழ்ச்சி

 72 நிமிடங்களில், 72 ஆசனங்கள்: குடியரசு தின சாதனை நிகழ்ச்சி


தூத்துக்குடியில் 72-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, 72 மாணவர்கள், 72 நிமிடங்களில், 72 யோகாசனங்களை செய்யும் சாதனை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.


தூத்துக்குடி ஷைன் யோகா பவர் அமைப்பு மற்றும் காமராஜ் கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்ட அணிகள் சார்பில், இந்நிகழ்ச்சி காமராஜ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.நாகராஜன் தலைமை வகித்தார்.


 நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்கள் ஆ.தேவராஜ், பொன்னுத்தாய், ஷைன் யோகா பவர் அமைப்பைச் சேர்ந்த எம்.சுந்தரவேல், சி.தனலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்பி எஸ்.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.


72-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, 72 நிமிடங்களில், 72 ஆசனங்களை, 72 மாணவ, மாணவியர் செய்து காண்பித்தனர். குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பை சேர்ந்த 5 பேர் நிகழ்ச்சியை கண்காணித்தனர்.

No comments:

Post a Comment