75 பள்ளிகள் தரம் உயர்வு அரசாணை வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, January 19, 2021

75 பள்ளிகள் தரம் உயர்வு அரசாணை வெளியீடு

 75 பள்ளிகள் தரம் உயர்வு அரசாணை வெளியீடு


தமிழகத்தில், 35 நடுநிலை பள்ளிகளை, அரசு உயர்நிலை பள்ளிகளாகவும், 40 உயர்நிலை பள்ளிகளை, மேல்நிலை பள்ளிகளாகவும், தரம் உயர்த்தி, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது


.முதல்வர் இ.பி.எஸ்., சட்டசபையில் அறிவித்தபடி, 35 ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி நடுநிலை பள்ளிகள், அரசு உயர்நிலை பள்ளிகளாக, தரம் உயர்த்தப்பட்டு உள்ளன.


ஒரு பள்ளிக்கு இரண்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம், 70 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இவற்றில், தரம் உயர்த்தப்படும் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி ஆசிரியர்களில், உயர்நிலை பள்ளியில் சேர விருப்பமுள்ள ஆசிரியர்களை சேர்த்துக் கொள்ளவும், இதர பணியிடங்களை, பணி நிரவல் வழியே நிரப்பவும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


நிலையிறக்கம் செய்யப்படும், முதல் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரையுள்ள, தொடக்கப் பள்ளிகளுக்கு, பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம், 35 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன.அதேபோல, நடப்பு கல்வியாண்டில், 40 அரசு, நகராட்சி உயர்நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாக, தரம் உயர்த்தப்பட்டுள்ளன.


தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிலை உயர்த்தப்படும்.இதற்கான அரசாணையை, பள்ளிக் கல்வித்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ளார். அரசாணையுடன் தரம் உயர்த்தப்பட்ட, பள்ளிகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment