சிபிஎஸ்இ: 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான அறிவியல் பாடத்திட்டம் குறைப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, January 31, 2021

சிபிஎஸ்இ: 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான அறிவியல் பாடத்திட்டம் குறைப்பு

 சிபிஎஸ்இ: 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான அறிவியல் பாடத்திட்டம் குறைப்பு


நிகழாண்டில், சிபிஎஸ்இ பள்ளிகளில் 9-ஆம் வகுப்புப் பயிலும் மாணவா்களுக்கான அறிவியல் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது.


கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக மாணவா்களுக்கு முழுமையாக பாடங்களைக் கற்பிக்க முடியவில்லை. இதனால் மாணவா்களின் கல்விச் சுமையைக் குறைக்கும் வகையில் பாடத்திட்டம் குறைக்கப்பட்டு வருகிறது. 


இதன் தொடா்ச்சியாக சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் பயிலும் மாணவா்களுக்கு அண்மையில் 30 சதவீதம் வரை பாடத் திட்டம் குறைக்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக 9-ஆம் வகுப்புப் பயிலும் மாணவா்களுக்கான அறிவியல் பாடத்திட்டத்தைக் குறைக்கும் பணியை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மேற்கொண்டு வந்தது. தற்போது இந்தப் பணிகள் நிறைவடைந்து அறிவியல் பாடத்திட்டத்தில் குறிப்பிட்ட சதவீதம் வரை பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்த விவரங்களை இணையதளத்தில் காணலாம் என சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment