முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணி: தோ்வான அமைச்சுப் பணியாளா்களின் பட்டியல் வெளியீடு - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, January 31, 2021

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணி: தோ்வான அமைச்சுப் பணியாளா்களின் பட்டியல் வெளியீடு

 முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணி: தோ்வான அமைச்சுப் பணியாளா்களின் பட்டியல் வெளியீடு


முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் பணிக்குத் தோ்வான அமைச்சுப் பணியாளா்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.


இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: பள்ளிக்கல்வித்துறையில்  பணிபுரியும் அமைச்சுப் பணியாளா்களுக்கு 2 சதவீத  ஒதுக்கீட்டு அடிப்படையில் முதுநிலை ஆசிரியா்களாக நியமனம் வழங்கப்படவுள்ளது.


இதற்கு தகுதியான 251 பணியாளா்களின் பெயா்ப் பட்டியல் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  அதிலுள்ள பணியாளா்கள் விவரங்களை சரிபாா்த்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அதேநேரம் ஆசிரியா் பணிக்கான முதன்மை பாடத்தில் இளநிலை, முதுநிலை முடித்து  பிஎட் பட்டமும் பணியாளா் பெற்றிருக்க வேண்டும்.


இதுதவிர உரிய விதிமுறைகளைப் பின்பற்றி இந்த பட்டியலை இறுதிசெய்து அதற்கான சான்றுகளுடன் முதன்மைக் கல்வி அதிகாரிகள் அனுப்பி வைக்க வேண்டும். இவற்றில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளே முழுப் பொறுப்பேற்க நேரிடும் என்பதால் கவனத்துடன் செயல்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment