பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினா வங்கி கையேடு எப்போது வழங்கப்படும்? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, January 31, 2021

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினா வங்கி கையேடு எப்போது வழங்கப்படும்? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினா வங்கி கையேடு எப்போது வழங்கப்படும்? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


பிப்ரவரியில் மற்ற வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:


 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினா வங்கி கையேடு, தேர்வு அட்டவணை வெளியிடப்படும்போது வழங்கப்படும். நீட், ஜே.இ.இ. பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து, மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.


 தமிழகத்தில் நீட் தேர்வு தேவை இல்லை என்பதுதான் தமிழக அரசின் கொள்கை. இருப்பினும் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில்தான் ஹைடெக் லேப் உள்ளது. மாணவர்களுக்கு க்யூ ஆர் கோடு, யூ-டியூப் சேனல் மற்றும் 12 தொலைக்காட்சி வழியாக பாடம் கற்பிக்கப்படுகிறது. தமிழகத்தில் 9, 10, 11, 12ம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்கு பிப்ரவரி மாதம் பள்ளி திறப்பு குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுக்க வேண்டும்.


 மற்ற மாநிலங்களில் 6ம் வகுப்பு திறக்கப்பட்டது குறித்து முதலமைச்சர் கவனித்து வருகிறார். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்

No comments:

Post a Comment