இளநிலை பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
மின்துறையில் இளநிலை பொறியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மின்துறை கண்காணிப்பு பொறியாளர் முரளி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
புதுச்சேரி மின்துறையில் 42 இளநிலை பொறியாளர் பதவிகள் 2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளது.
பொறியியல் பட்ட படிப்பு அல்லது டிப்ளமோ எலட்ரிக்கல், எலட்ரிக்கல் மற்றும் எலட்ரானிக்ஸ் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். (அரசு விதிப்படி வயது தளர்வு உண்டு). தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன் லைன் மூலமாக பெறப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு
இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் பெற கால அவகாசம், வரும் 11ம் தேதி வரை மாலை 5:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment