தியேட்டர்களில் முழு அனுமதி: ஐ.சி.எம்.ஆர்., விஞ்ஞானி எச்சரிக்கை - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, January 5, 2021

தியேட்டர்களில் முழு அனுமதி: ஐ.சி.எம்.ஆர்., விஞ்ஞானி எச்சரிக்கை

 தியேட்டர்களில் முழு அனுமதி: ஐ.சி.எம்.ஆர்., விஞ்ஞானி எச்சரிக்கை


தனிமனித இடைவெளி இல்லாமல், மூடிய அரங்கில் இருந்தால், கொரோனா வைரஸ் தீவிரமாக பரவும்' என, ஐ.சி.எம்.ஆர்., விஞ்ஞானி பிரதீப் கவுர் எச்சரித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தினசரி பரவல், 1,௦௦௦க்கு கீழ் குறைந்துள்ளது.


 உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. வைரஸ்இதற்கிடையே, பிரிட்டனில், மரபணு மாற்றம் ஏற்பட்ட கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


 அங்கிருந்து தமிழகம் வந்த, 24 பேருக்கு, கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்த, 20 பேரும் பாதிக்கப்பட்டனர். இதில், நான்கு பேர், மரபணு மாறிய தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், திரையரங்குகளில், 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பொங்கலுக்கு புதிய படங்கள் வெளியாவதை தொடர்ந்து, அரசு இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும், தேசிய தொற்று நோய் பரவியல் விஞ்ஞானி, பிரதீப் கவுர், 'டுவிட்டர்' பதிவில், 'தனிமனித இடைவெளி இல்லாமல், மூடிய அரங்கில் இருந்தால், கொரோனா வைரஸ் தீவிரமாக பரவும். இத்தகைய இடங்களுக்கு பொதுமக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார். அதேபோல், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ், 'பேஸ்புக்' பதிவு:


 அன்புக்குரிய நடிகர்கள் விஜய், சிலம்பரசன் மற்றும் தமிழக அரசுக்கு...என்னை போன்ற பல்லாயிரக்கணக்கான டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள், காவல் துறையினர், துப்புரவு பணியாளர்கள் என, கொரோனா முன்கள பணியாளர்கள், தற்போதைய சூழலில் சோர்வடைந்து இருக்கிறோம். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, பெருந்தொற்று பாதிப்பில் இருக்கிறோம். இந்த அசாதாரணமான சூழலில், தொற்றை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு கட்டுப்படுத்தி உள்ளோம். ஆனாலும், முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. 

‌ வேடிக்கை ‌

தியேட்டர்களில், 100 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி அளித்திருப்பது, தற்கொலைக்கு சமமானது. 


இதில், வேடிக்கை என்னவென்றால், ஆட்சியாளர்களோ, அரசியல் தலைவர்களோ, நடிகர்களோ, மக்களோடு, மக்களாக கூட்ட நெரிசலில் படம் பார்க்க, திரையரங்கம் செல்லப் போவதில்லை. 


எனவே, பணத்திற்காக, மனித உயிர்களை பணயம் வைக்க வேண்டாம். இந்த அனுமதியை, தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment