கல்வி நிறுவனங்கள் திறப்பது உள்பட கொரோனாவை குறைக்காமல் கூடுதல் தளர்வுகள் கூடாது: கேரள சுகாதாரத்துறை எச்சரிக்கை - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, January 31, 2021

கல்வி நிறுவனங்கள் திறப்பது உள்பட கொரோனாவை குறைக்காமல் கூடுதல் தளர்வுகள் கூடாது: கேரள சுகாதாரத்துறை எச்சரிக்கை

 கல்வி நிறுவனங்கள் திறப்பது உள்பட கொரோனாவை குறைக்காமல் கூடுதல் தளர்வுகள் கூடாது:  கேரள சுகாதாரத்துறை எச்சரிக்கை


திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவலை கணிசமான குறைக்காமல் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படுவது உட்பட மேலதிக சலுகைகள் வழங்கப்படக்கூடாது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. திருவனந்தபுரத்தில் நேற்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன. கொரோனா பரவலை கணிசமான குறைக்காமல் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படுவது உட்பட மேலதிக சலுகைகள் வழங்கக்கூடாது.


 திரையரங்குகளில் கூடுதல் இருக்கைகளுக்கு அனுமதி உள்ளிட்ட மத்திய அரசு அறிவித்த தளர்வுகளை கேரளாவில் செயல்படுத்த வேண்டியதில்லை. கிளஸ்டர்கள், கன்டெய்மென்ட் மண்டலங்களில் கட்டுப்பாடுகள் கண்டிப்பாக செயல்படுத்தப்பட வேண்டும். பொது போக்குவரத்தில் 50 சதவீதம் இருக்கைகளில் மட்டுமே பயணம். அலுவலகங்களில் 50 சதவீத வருகை, இரவு 7 மணி வரை மட்டுமே கடைகள், ஹோட்டல்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே அமர அனுமதி.


திரைப்பட அரங்குகள் திறக்காதது போன்ற நிபந்தனைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. இதுபோன்ற கட்டுப்பாடுகள் தற்போது இருந்தாலும், அவற்றை செயல்படுத்துவதில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன. ஒரே நேரத்தில் சுற்றுலா தலங்களுக்கு வரும் பலரின் படங்கள் கூட்டத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன.


 கலெக்டர்களுடன் கலந்து ஆலோசித்து நெரிசலை கட்டுப்படுத்துமாறு மருத்துவ அதிகாரிகளை முதல்வர் கேட்டுக்கொண்டார். எந்த தொடர்பு வழி தொற்று ஏற்பட்டது என்பதை கண்டறிய தவறியது கொரோனா வேகமாக பரவுவதற்கு வாய்ப்பு அளித்தது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் பல்வேறு கட்டங்கள் குறித்த புள்ளிவிவரங்களும் சுகாதாரத்துறை அளித்த அறிக்கையில் உள்ளன.


ஓணம், தீபாவளி, கிறிஸ்துமஸ் விழாக்கள், 100 சதவீத வருகையுடன் அலுவலக வேலை, பள்ளிகளில் 10, 12ம் வகுப்புகள், உள்ளாட்சி தேர்தல்களினால் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் விகிதங்கள் 9 சதவீதத்துக்கு மேல் உயந்துள்ளது. சமீபநாட்களாக இது 10 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. நேற்று ெகாரோனா பாசிட்டிவ் விகிதம் 10.51 சதவீதமாக இருந்தத. நேற்று 6,282 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 


கேரளாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தினமும் 1 லட்சம் பரிசோதனைகள் நடத்தப்படும். இதில் 25 ஆயிரம் ஆன்டிஜன், 75 ஆயிரம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து இருந்தார். இது உடனடியாக செயல்படுத்தப்படாது. போதுமான ஆய்வகங்கள் இல்லாததால் இதில் சிக்கல் எழுந்துள்ளது. இதுவும் கொரோனாவின் வேகமான பரவலை தடுக்க முட்டுக்கட்டையாக உள்ளது.

No comments:

Post a Comment